செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (17:22 IST)

அதிக வரி செலுத்தும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான்!

இந்தியாவை பொறுத்த வரை அதிகம் சம்பளம் பெறுவது நடிகர்கள் தான். ஒரு படத்திற்கு ரூ 1 கோடியில் ஆரம்பித்து ரூ. 60  கோடி வரை சம்பளமாக பெறும் நடிகர்கள் உள்ளனர். ஹிந்தி நடிகர்களில் நடிகர் சல்மான் கான், அக்‌ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன், கபில் சர்மா ஆகியோர் கோடிகளில் வரி செல்லுத்துகின்றனர். நடிகைகளில் தீபிகா படுகோன், அலியா பட் ஆகியோர்  இருக்க்கின்றனர்.

 
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்தும் நடிகர் சல்மான் கான் தானாம். இவர் ரூ.  44 கோடி வரை வரியாக மட்டுமே செலுத்தி வருகின்றாராம், இவருக்கு அடுத்த இடத்தில் அக்‌ஷய்குமார் ரூ.29 கோடி,  ஹிருத்திக் ரோஷன் ரூ. 25.5 கோடி, கபில் சர்மா ரூ. 23 கோடி செலுத்தியிருக்கிறார்கள்.
 
நடிகைகளில் தீபிகா படுகோன் ரூ. 10 கோடி, அலியா பட் ரூ. 1.5 கோடி வரை வரி செலுத்தியுள்ளார்.